search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெஹானா பாத்திமா"

    சபரிமலை பற்றி அவதூறு பரப்பியதால் கைதான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கேரள ஐகோர்ட்டு பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டது. #KeralaHC #RehanaFathima
    திருவனந்தபுரம்:

    பி.எஸ்.என்.எல். ஊழியரும் மாடல் அழகியுமான ரெஹானா பாத்திமா சபரிமலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டார். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியினர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக பத்தினம்திட்டா போலீசார் அவரை கடந்த மாதம் 27-ந் தேதி கைது செய்தனர்.

    கைதான ரெஹானா பாத்திமாவின் ஜாமீன் மனுவை பத்தினம் திட்டா மாஜிஸ்திரேட் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே அவர் கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு இன்று ரெஹானா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்கியது. அதே நேரம் அவர் பம்பையில் நுழையவும் தடை விதித்து உத்தரவிட்டது. #KeralaHC #RehanaFathima

    சபரிமலைக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SabarimalaTemple #Rehna
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.



    கேரள மந்திரியின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.

    இதற்கிடையில், ரெஹானா மீது இந்திய கிரிமினல் சட்டம் 295A-வின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யலாம் என கருதிய ரெஹானா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து விட்டது. #SabarimalaTemple #Rehna
    ×